Skip to main content

புரூஸ் லீ






    
நாம் யாரொடு மோதுகிறோமோ அதை பொறுத்துதான் நாம் யார் என்று

                                                         உலகம் தீர்மானிக்கும்





      
லீ தன் அப்பாவை போலவே திரையில் நடித்துக்கொண்டு இருந்தான் இளவயதிலேயே அந்த
சிறுவன்.சீக்கிரமே குங் பூ கற்றுத்தேறிய அவன் தெருக்களில் மற்ற பிள்ளைகளோடும் ,போலீஸ் உடனும்  தொடர்ந்து   வம்புக்களில்  ஈடுபடுவதை அவர் தந்தை கவலையோடு பார்த்தார்.அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தார். வயிற்றுப்பிழைப்புக்கு அங்கே குங் பூ சொல்லித்தந்து கொண்டிருந்தார் லீ
அப்பொழுது வோங் ஜாக்மான் எனும் அனுபவம் மிக்க குங்பூ வீரர் "ஆசியர் அல்லாதவர்களுக்கு ஏன் குங் பூ சொல்லித்தருகிறாய்" என்று கேட்க ,"கலை எல்லாருக்கும் பொதுவானது தானே " என அந்த இளைஞன் திருப்பிக்கேட்டார். "அப்படியில்லை ! வலியவன் சொல்வதை தானே உலகம் கேட்கும் ? நாமிருவரும் சண்டை போடுவோம். நான் வென்றால்  நீ குங் பூ சொல்லித்தருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் ; நீ வென்றால் நான் குங் பூ என்கிற பெயரைக்கூட இனிமேல் உச்சரிக்க மாட்டேன் ! என்னோடு சண்டையிடு என்னோடு சண்டையிடு " என்றார் அவர்.


இளைஞன் இணங்கி சண்டையிட்டார். அனல் பறந்த சண்டையில் வேகம் மிகுந்த இவர் வென்றுகாட்டினார். அவரை வென்றதும் முன்னமே சொன்னபடி வோங் ஜாக்மான் குங்
பூ சொல்லித்தருவதை நிறுத்திக்கொண்டார் .ஆனால்,அது எண்ணற்ற கேள்விகளை அந்தப் பையனின் மனதில் விளைத்தது. ஹாங்காங்கில் மிகப்பெரும் குத்துசண்டை வீரனாக இருந்து நொடியில் பலரை நாக்கவுட் செய்த தான் அதிக நேரம் எடுத்து ஜாக்மான் உடன் மோதியது அவரின் பாரம்பரிய குங்பூவின் மீதான ஈர்ப்பை மங்கசெயதது .
தானே இன்னும் பல மாற்றங்களை உருவாக்கினார்.அவர் படித்த தத்துவம் அவருக்கு அதீத அமைதியை தந்தது,எவ்வளவு பெரிய சண்டையையும் எளிமையாக வென்றார். "நீர் போல அமைதியாக ஓடிக்கொண்டு ,சலனமற்று இருக்கிறேன் ,மூங்கிலை போல வளைந்து கொள்கிறேன்.ஆழ்ந்த அமைதி என்னை எப்பொழுதும் வழி நடத்துகிறது" என்ற அவர் டிவி ஷோக்களில் கலக்கிய பின் சீட்டின் முனைக்கே கொண்டுசெல்லும் சண்டைகாட்சிகள் மூலம் ஹாலிவுட்டில் கலக்கினார்.
புரூஸ் லீ ஒரு கவிஞர் என்பதை தாண்டி ஒரு தீர்க்கமான தத்துவ ஞானம் மிக்கவராக இருந்தார் என்பதே சரி. "எதிரி என்று ஒருவன் இல்லவே இல்லையே ; எல்லாமே பிம்பங்கள்,பிரதிபிம்பங்கள். அவற்றை நொறுக்கிவிட்டால் போதும். எதிரிகள் என்று யாருமில்லை என உணர்வீர்கள் !" என்றார் அவர்.  ஜென் அவரைத் தொடர்ந்து செலுத்தியது. பேரமைதி அவரிடம் குடிகொண்டு இருந்தது,ஒரு முறை சீன இளைஞன் ஒருவன் ஹோட்டலில் வம்புக்கு இழுத்துக்கொண்டே இருந்தான், லீ அமைதியாகவே இருந்தார் "ஏன் இப்படி ?" என்று கேட்ட பொழுது ,"நான் எப்பொழுதும் மகிழ்ச்சியோடு இருக்கிறேன். அதை மற்றவர்கள் திருட விடமாட்டேன் !" என்று மட்டும் சொன்னார். வீரம்  என்பது
சண்டை போடுவதில் மட்டுமில்லை ; யாருடன் சண்டை போடாமல் இருக்க வேண்டும் என
உணர்ந்து  நடப்பதிலும் இருக்கிறது.
நிறைய ஜென் கதைகள் சொல்லும் லீக்கு மிகவும் பிடித்த கதை ஒன்று உண்டு. கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லி வந்த இளைஞனிடம் நிரம்பிய தேநீர் கோப்பையை மீண்டும் ஊற்றி நிறைக்க முயல்கிற செயலை செய்து "வெறுமையாக இருக்கிற பொழுது தான்,அறிதலைக்கடந்து உணர்தலை நோக்கி நகர்கிற பொழுது தான் நீ ஜென் ஆகிறாய் !" என்கிற ஆழ்ந்த தத்துவம் இருப்பதை உணர்த்திய அந்தக்கதை மிகவும் பிடிக்கும் . மனம் விரும்புவதை உடல் செய்ய இந்த அறிதல் முக்கியம் என்பார் புரூஸ் லீ. அதுவே அவரின் அசரவைக்கும் சண்டைக்காட்சிகளுக்கு அடிப்படை.
நம்பினால் நம்புங்கள் புருஸ் லீக்கு உடலில் குறைபாடு ஒன்றிருந்தது. அவரின் வலது கால் இடது காலை விட நான்கு சென்டிமீட்டர் உயரம் குறைவு. ஆனால்,உங்கள் தலையில் ஒரு நாணயத்தை வைத்தால் அதை உங்கள் தலைமுடியைக்கூட அசைக்காமல் அவரால் எடுக்க முடியும். கேட்ட பொழுது ,"நாணயம் மட்டும் தான் என்னுடைய கண்களில் தெரியும். அதில் மூழ்கிப்போவது தானே குங்பூ !" என்றார்
அவரின் வேகம் எந்தளவுக்கு இருந்தது என்றால் ஒரு காட்சிக்கு நொடிக்கு இருபத்தி நான்கு பிரேம்கள் அவரின் வேகத்தை பிடிக்க போதாமல் கூடுதலாக பத்து பிரேம்கள் தேவைப்பட்டன ! இருந்தாலும் அதை ஆழ்ந்த அமைதியோடு செய்கிற சமநிலை புரூஸ் லீக்கு இருந்தது. அவர் பட்டப்படிப்பு படித்தது
தத்துவத்தில் என்பது அவரின் ஆழ்ந்த தேடலை உணர்த்தும் . முப்பத்தி மூன்று வயதில் இறந்து போனாலும் இன்னமும் ஆக்ஷனில் தொட முடியாத உயரத்தில் இருக்கும் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள அத்துணை பாடங்கள்.
அவரின் ஒரு கவிதை தான் அவரின் வாழ்வானது :
மேற்கே காற்றை
எல்லாம் தங்கமயமாக்கி
கதிரவன் கரடுமுரடான மலையில் கரைகிறான்
கரைந்துருகும் பனித்துளிக்கு
வெகுதூரம் தள்ளி
மலையுச்சியின் மீது
தங்க டிராகன்
தனித்து தன் கனவுகள்
வெளிச்ச மேற்கில் தேய,மறைய
சலனமில்லாமல் நிற்கிறது !


Comments

Popular posts from this blog

உலகும் அழகும் - அதிர்ச்சி தரும் அழகு

                     அழகுன்னா என்னனு  உங்க மனசுல இருக்கிற IDEA , உங்களுக்கா தோன்றியிருக்காது யாரோ சொன்னதா இருக்கும்       எனக்கும்  யாரோதான் சொன்னாங்க நம்ம நினைக்கிற சில விஷயங்கள் , பல சமயங்கள்ள நம்ம நினைக்கிற மாதிரி இருக்கிறது இல்ல மேல இருக்கிறவங்க எல்லோரும் அவங்க ஊர்ல அழகு இவங்களும்தான்                                                 இந்திய காலச்சாரம் உலகின் ஒவ்வொரு கலாச்சாரத்திலும் அழகுங்க்கிறதுக்கு அர்த்தம் வெவ்வேற மாதிரி இருக்கு சில கலாச்சாரதத்துல கழுத்து நீளமா இருந்ததாதான் அழகு நம்ம ஊர்ல சின்ன வயசிலேயே fair & lovely போடுவோம் சிகப்பாக,  இங்க அவங்க ஊரு STYLE ல அழகாக சின்ன வயசிலே வலயத்தை அணிகிறார்கள் மனச திடப்படுதிக்குங்க என் மக்களே ,  உலகை சுற்றி மற்ற  கலாச்சாரங்கள் இவங்க நாட்டுல நம்ம படத்தை  இவங்களுக்கும் வித்யாசமாதான் இருக்கும்               அழகுன்னு சொல்லிட்டு சுத்தி சுத்தி பொண்ணுங்க PHOTO வ இருக்கேனு பார்க்கிறீங்களா என்ன பன்றது மனித இனத்த தவிர ஏறக்குரைய எல்லா இ

Einstein Relativity theory

  Einstein with Girl Einstein : Relativity Theory உனக்கு புரியாது அப்ப எனக்கு புரியர மாதிரி சொல்லுங்க என்று சொன்ன பெண்ணிடம் நீ  ஒரு அழகான பொண்ணு பக்கத்துல ஒரு மணி நேரம் உட்காந்திருந்திதா அந்த ஒரு மணி நேரம் 5 நிமிசம் மாதிரியும் ஒருவேளை ஒரு சூடான அடுப்பு மேல 5 நிமிசம் உட்காந்திருந்திதா அந்த 5 நிமிசம் மாதிரியும் தெரியும்                                               -------  நம்மள்ள பல பேர்  Relativity Theory ah Feel பண்ணியிருப்போம் , புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்

TAMIL GODFATHER

                                                                                                                          வரதராஜ முதலியார் INTRODUCING: DON VARADHARAJAN MUTHALIAR THE MOST FEARED MAN BOMBAY TODAY நாலுபேருத்துக்கு நல்லதுனா எதுவுமே தப்பில்ல!           இவரது வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது,  கமலின்  நாயகன் படம் . வரதராஜ முதலியார் ஆரம்பத்தில்(1960) Mumbai Victoria Terminus  station ல் Porter ஆக வாழ்க்கையை தொடங்க்கினார்.                           அப்போதே அவர் தலைப்புச் செய்தியாக இருந்தவர் தமிழர் பகுதிகளில் பல உதவிகளை செய்துள்ளார்.  இவரது வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட நாயகன் உலகின் தலைசிறந்த 100 படங்களில் ஒன்றாக உள்ளது