Skip to main content

சே குவேரா





             ''உலகின் எந்த மூலையிலும் ஏகாதிபத்தியம் தலை தூக்குவதைக் கண்டு

உங்கள் ரத்தம் சூடேறினால் நீ என் தோழன்” -சே













 



  க்யூபாவில் தான் உங்கள் புரட்சி வென்றுவிட்டதே. பிறகு ஏன் பொலிவியாவில் போராடுகிறீர்கள் என்ற கேள்விக்கு சே இப்படி பதிலளித்தார்,








   "உண்மையில் நான் அர்ஜெண்டினாவை சேர்ந்தவன் மேலும் க்யுபாவை

சேர்ந்தவன், பொலிவியாவை சேர்ந்தவன், ஆப்ரிக்காவை சேர்ந்தவன்,

ஆசியாவை சேர்ந்தவன், ஏன் அமெரிக்காவை சேர்ந்தவன் கூட. ஏனெனில்

அடிமைப்பட்டு கிடக்கும் ஒவ்வொரு நாடும் என் தாய் நாடு. அவர்களுக்கு எனது

போராட்டம் தேவையை இருக்கிறது. நானொரு கொரில்லா போராளி. அப்படி

அழைக்கபடுவதைத்தான் நான் விரும்புகிறேன்"



ஓரளவு வசதியான குடும்பத்தில் பிறந்து ,மருத்துவப் படிப்பையும் முடித்த இளைஞன் அவன். அவனால் தன் வீடு, தன் வாழ்க்கை என்று இருக்க முடியவில்லை.


 


 நண்பன் ஒருவனுடன் ஒரு மோட்டார் சைக்கிளில் லத்தீன் அமெரிக்கா முழுவதும் சுற்றி வர தொடங்குகிறான். அந்த பயணத்தின் ஆரம்பம், உலக பண முதலைகளின் அழிவுக்கான ஆரம்பம் என்பது அப்போது யாருக்கும் தெரிந்திருக்காது.





1950ல் தொடங்கிய சேவின் பயணம்,1967 ஆம் ஆண்டு பொலிவிய ராணுவத்தால் முடிவுற்றது. இடையில் ஒரு நாள் கூட ஓய்வெடுத்ததில்லை.  இன்றும் சேவைப் பற்றி படிக்கும்போதும், படங்களைப் பார்க்கும் போதும் நட்சத்திர தொப்பி அணிந்து அவரின் உருவம் என் கண் முன்னே வந்து போகிறது. சில நொடிகள் வரும் அந்த சிலிர்ப்பு. அதில் வாழ்கிறார் சே என்கிற எர்னெஸ்ற்றோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna)





எந்த நாட்டிற்கெதிராக தன் வாழ்நாள் முழுவது போராடினாரோ, அந்த நாட்டு இளைஞர்களே டீஷர்டிலும், கீ செய்னிலும் சேவின் படத்தோடு திரிகிறார்கள். எந்த வரலாற்றை மறைக்க முயன்றார்களோ அதை அந்த நாட்டிலே படமாக எடுக்கிறார்கள். சேவை வாழும்போது மட்டுமல்ல, அவன் இறந்த பிறகும் ஜெயிக்க முடியவில்லை.
காடுகளிலே பாதி வாழ்க்கை வாழ்ந்த சேவுக்கு சிறுவயதில் இருந்தே ஆஸ்த்மா நோய் இருந்தது. தனது மோட்டார் சைக்கிள் பயணத்தின் போது நடந்த விபத்தில் சேவின் கால் சூடான காஸ் சிலிண்டருக்கு அடியில் மாட்டிக் கொண்டது. க்யூபா போராட்டத்தின் போது அவரின் காலில் குண்டும் பாய்ந்தது. ஆனால் எதுவுமே அவரை தடுத்து நிறுத்தவில்லை. விடுதலை,புரட்சி என்று யார் சொன்னாலும் அவர் சேவை நினைத்துத்தான் சொல்லுவார் என்னுமளவுக்கு வாழ்ந்தவன் சே.







சே குவேரா இந்தியா வந்தபோது நேரு உடன்








THE GREAT CHE GUVERA



 


     ஒரு குறிப்பிட்ட நாளில் (யுத்த சூழ்நிலையில்) உணவுக்காக கோழியின்

அடையில் இருந்த முட்டைகளை அவரது நண்பர்கள் எடுத்து சாப்பிடும்

போது


 சே ஒரு முட்டையை கோழியின் அடையிலேயே வைத்துவிட்டார்.


                               ஏன் என்றால்


கோழி அதன் கடமையை செய்ய திரும்ப வரும்போது அது ஏமாந்து


போய்விடக்கூடாது என்பதற்காக



Comments

Popular posts from this blog

உலகும் அழகும் - அதிர்ச்சி தரும் அழகு

                     அழகுன்னா என்னனு  உங்க மனசுல இருக்கிற IDEA , உங்களுக்கா தோன்றியிருக்காது யாரோ சொன்னதா இருக்கும்       எனக்கும்  யாரோதான் சொன்னாங்க நம்ம நினைக்கிற சில விஷயங்கள் , பல சமயங்கள்ள நம்ம நினைக்கிற மாதிரி இருக்கிறது இல்ல மேல இருக்கிறவங்க எல்லோரும் அவங்க ஊர்ல அழகு இவங்களும்தான்                                                 இந்திய காலச்சாரம் உலகின் ஒவ்வொரு கலாச்சாரத்திலும் அழகுங்க்கிறதுக்கு அர்த்தம் வெவ்வேற மாதிரி இருக்கு சில கலாச்சாரதத்துல கழுத்து நீளமா இருந்ததாதான் அழகு நம்ம ஊர்ல சின்ன வயசிலேயே fair & lovely போடுவோம் சிகப்பாக,  இங்க அவங்க ஊரு STYLE ல அழகாக சின்ன வயசிலே வலயத்தை அணிகிறார்கள் மனச திடப்படுதிக்குங்க என் மக்களே ,  உலகை சுற்றி மற்ற  கலாச்சாரங்கள் இவங்க நாட்டுல நம்ம படத்தை  இவங்களுக்கும் வித்யாசமாதான் இருக்கும்               அழகுன்னு சொல்லிட்டு சுத்தி சுத்தி பொண்ணுங்க PHOTO வ இருக்கேனு பார்க்கிறீங்களா என்ன பன்றது மனித இனத்த தவிர ஏறக்குரைய எல்லா இ

Einstein Relativity theory

  Einstein with Girl Einstein : Relativity Theory உனக்கு புரியாது அப்ப எனக்கு புரியர மாதிரி சொல்லுங்க என்று சொன்ன பெண்ணிடம் நீ  ஒரு அழகான பொண்ணு பக்கத்துல ஒரு மணி நேரம் உட்காந்திருந்திதா அந்த ஒரு மணி நேரம் 5 நிமிசம் மாதிரியும் ஒருவேளை ஒரு சூடான அடுப்பு மேல 5 நிமிசம் உட்காந்திருந்திதா அந்த 5 நிமிசம் மாதிரியும் தெரியும்                                               -------  நம்மள்ள பல பேர்  Relativity Theory ah Feel பண்ணியிருப்போம் , புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்

TAMIL GODFATHER

                                                                                                                          வரதராஜ முதலியார் INTRODUCING: DON VARADHARAJAN MUTHALIAR THE MOST FEARED MAN BOMBAY TODAY நாலுபேருத்துக்கு நல்லதுனா எதுவுமே தப்பில்ல!           இவரது வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது,  கமலின்  நாயகன் படம் . வரதராஜ முதலியார் ஆரம்பத்தில்(1960) Mumbai Victoria Terminus  station ல் Porter ஆக வாழ்க்கையை தொடங்க்கினார்.                           அப்போதே அவர் தலைப்புச் செய்தியாக இருந்தவர் தமிழர் பகுதிகளில் பல உதவிகளை செய்துள்ளார்.  இவரது வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட நாயகன் உலகின் தலைசிறந்த 100 படங்களில் ஒன்றாக உள்ளது